ஸுஹைப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
தொழுது கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் கடந்து சென்றேன். நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன், அதற்கு அவர்கள் சைகை மூலம் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் கூறினார்கள்: அவர்கள் தமது விரலால் சைகை செய்ததாகக் கூறினார்கள் என்றே நான் அறிவேன். இது குதைபா அவர்களின் அறிவிப்பு ஆகும்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு ஸலாம் கூறினேன், அதற்கு அவர்கள் சைகை செய்வதன் மூலம் பதிலளித்தார்கள்.
அவர் கூறினார்: “அவர்கள், 'தமது விரலால் சைகை செய்தார்கள்' என்று கூறியதாகவே நான் அறிவேன்.”