அபூபக்ர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹத்மா (ரழி) அவர்கள் வழியாக இப்னு ஷிஹாப் (அஸ்-ஸுஹ்ரீ) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள் தம்மைச் சந்திக்கும் வரை, சந்தேகம் ஏற்படும்போது செய்யப்படும் இரண்டு ஸஜ்தாக்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யவில்லை.
அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்; இந்த ஹதீஸை அஸ்-ஸாஹிதீ அவர்கள், அஸ்-ஸுஹ்ரீ அவர்களிடமிருந்தும், அவர்கள் அபூபக்ர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹத்மான் (ரழி) அவர்களிடமிருந்தும், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பில் இவ்வாறு உள்ளது:
அவர்கள் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்யவில்லை.