அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத்) (ரழி) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியதும், மக்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். அவர்கள் கேட்டார்கள்; உங்களுக்கு என்ன ஆயிற்று? அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதரே, தொழுகையின் (ரக்அத்களின் எண்ணிக்கை) அதிகரிக்கப்பட்டுவிட்டதா? அவர்கள் கூறினார்கள்: இல்லை. அவர்கள் கூறினார்கள்; நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதுள்ளீர்கள். பின்னர் அவர்கள் திரும்பி இரண்டு ஸஜ்தாக்கள் செய்து, அதன்பிறகு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு அவர்கள் கூறினார்கள்: நானும் ஒரு மனிதன்தான், நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறக்கிறேன்.