ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் வானத்தை நோக்கித் தம் பார்வைகளை உயர்த்தும் மக்கள், அதை அவர்கள் நிறுத்திக்கொள்ளட்டும்; இல்லையெனில் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுவிடும்.
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:
மக்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது தங்கள் பார்வைகளை வானத்தை நோக்கி உயர்த்துவதை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அவர்களுடைய பார்வைகள் பறிக்கப்பட்டுவிடும்.