حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ الْمَكْتُوبَةِ قُمْنَ، وَثَبَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ الرِّجَالُ.
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(நபிகளாரின் மனைவி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், பெண்கள் தங்கள் கடமையான தொழுகைகளை (தஸ்லீம் கூறி) முடித்ததும் (தங்கள் இடங்களிலிருந்து) எழுந்து விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், தொழுத ஆண்களும் அல்லாஹ் நாடியவரை (தங்கள் இடங்களில்) அமர்ந்திருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும், ஆண்களும் எழுவார்கள்.