கப் இப்னு உஜ்ரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
சில குறிப்பிட்ட திக்ருகள் உள்ளன; ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அவற்றை ஓதுபவர்கள் அல்லது செய்பவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டார்கள்: "சுப்ஹானல்லாஹ்" முப்பத்து மூன்று தடவைகள், "அல்ஹம்துலில்லாஹ்" முப்பத்து மூன்று தடவைகள், மற்றும் "அல்லாஹு அக்பர்" முப்பத்து நான்கு தடவைகள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஅக்கிபாத் உள்ளன; அவற்றைக் கூறுபவர் ஒருபோதும் கைசேதப்படமாட்டார். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் முப்பத்து மூன்று முறை அல்லாஹ்வைத் துதியுங்கள், முப்பத்து மூன்று முறை அவனைப் புகழுங்கள், மேலும் முப்பத்து நான்கு முறை அவனைப் பெருமைப்படுத்துங்கள்.”
وعن كعب بن عجرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: معقبات لا يخيب قائلهن -أو فاعلهن- دبر كل صلاة مكتوبة: ثلاثًا وثلاثين تسبيحة وثلاثًا وثلاثين تحميدة، وأربعًا وثلاثين تكبيرة ((رواه مسلم)).
கஃபு பின் உஜ்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "சில வார்த்தைகள் உள்ளன, அவற்றை ஓதுபவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டார்கள். அவையாவன: தஸ்பீஹ் ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூய்மையானவன்) என்று கூறுவது முப்பத்து மூன்று தடவைகள், தஹ்மீத் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது முப்பத்து மூன்று தடவைகள் மற்றும் தக்பீர் ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறுவது முப்பத்து நான்கு தடவைகள் ஆகும்; மேலும், இவற்றை ஒவ்வொரு கடமையான தொழுகையின் முடிவிலும் ஓத வேண்டும்."