இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1530சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَاتَ رَجُلٌ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَعُودُهُ. فَدَفَنُوهُ بِاللَّيْلِ. فَلَمَّا أَصْبَحَ أَعْلَمُوهُ. فَقَالَ ‏ ‏ مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي ‏ ‏ ‏.‏ قَالُوا كَانَ اللَّيْلُ وَكَانَتِ الظُّلْمَةُ فَكَرِهْنَا أَنْ نَشُقَّ عَلَيْكَ ‏.‏ فَأَتَى قَبْرَهُ، فَصَلَّى عَلَيْهِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நலம் விசாரித்து வந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரை (மக்கள்) இரவில் நல்லடக்கம் செய்துவிட்டார்கள். காலை ஆனதும், அவர்கள் அது பற்றி நபியவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபியவர்கள், ‘எனக்குத் தெரிவிப்பதை விட்டும் உங்களைத் தடுத்தது எது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அது இரவாகவும் இருட்டாகவும் இருந்தது; உங்களுக்குச் சிரமம் கொடுப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்கள். பின்னர் நபியவர்கள் அவரது கபுருக்குச் சென்று, அவர் மீது (ஜனாஸாத்) தொழுகை தொழுதார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)