"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள், மேலும் அவர்கள் 'அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்' என்று ஓதுவதை நாங்கள் கேட்கவில்லை. அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரும் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்; அவர்களிடமிருந்தும் நாங்கள் அதைக் கேட்கவில்லை."