حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبِي بَكْرٍ وَعُمَرَ، وَمَعَ عُثْمَانَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ ثُمَّ أَتَمَّهَا.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுடனும், அபூபக்ர் (ரழி) மற்றும் உமர் (ரழி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதேன். உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பப் பகுதியிலும் (அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதேன்). பிறகு அவர்கள் (மினாவில் தொழுகையை) முழுமைப்படுத்தினார்கள் (நான்கு ரக்அத்களாகத் தொழுதார்கள்).
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவின்) இரண்டு யமானி மூலைகளைத் தவிர வேறு எதையும் (தவாஃப் செய்யும் போது) தடவுவதை தாம் பார்த்ததில்லை என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; அபூபக்கர் (ரழி) அவர்களும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; உமர் (ரழி) அவர்களும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; உஸ்மான் (ரழி) அவர்களும் தமது கிலாஃபத்தின் ஆரம்பத்தில் (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்."