حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، قَالَ اسْتَسْقَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ خَمِيصَةٌ لَهُ سَوْدَاءُ فَأَرَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَأْخُذَ بِأَسْفَلِهَا فَيَجْعَلَهُ أَعْلاَهَا فَلَمَّا ثَقُلَتْ قَلَبَهَا عَلَى عَاتِقِهِ .
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலங்கரிக்கப்பட்ட ஓரத்தைக் கொண்ட ஒரு கருப்பு அங்கியணிந்து மழைவேண்டித் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் கீழ்ப்பகுதியைப் பிடித்து, கீழிருந்து மேலாக அதைத் தலைகீழாக மாற்ற நாடினார்கள். ஆனால் அது மிகவும் கனமாக இருந்ததால், அதைத் தங்களின் தோள்களின் மீது திருப்பிக் கொண்டார்கள்.