அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவன் (அல்லாஹ்) கூறினான்: நான் எனது அடியார்களுக்கு ஒரு அருட்கொடையை வழங்கியபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அதனை நிராகரித்து, 'நட்சத்திரங்கள், அது நட்சத்திரங்களால்தான்' என்று கூறினார்கள்.