இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள்; மக்களும் அவர்களுடன் நின்றார்கள். அவர்கள் தக்பீர் கூறினார்கள்; மக்களும் அவர்களுடன் தக்பீர் கூறினார்கள். அவர்கள் ருகூஃ செய்தார்கள்; அவர்களில் ஒரு சாராரும் ருகூஃ செய்தார்கள். பிறகு அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள்; அவர்களும் அவர்களுடன் ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு அவர்கள் இரண்டாவது (ரக்அத்துக்காக) எழுந்தார்கள். ஸஜ்தாச் செய்தவர்கள் எழுந்து நின்று தங்கள் சகோதரர்களைப் பாதுகாத்தார்கள். அப்போது மற்றொரு சாரார் வந்து, அவர்களுடன் ருகூஃ மற்றும் ஸஜ்தாச் செய்தார்கள். மக்கள் அனைவரும் தொழுகையிலேயே இருந்தனர்; ஆயினும், அவர்களில் சிலர் சிலரைப் பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.