حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ خَرَجَ عُمَرُ يَوْمَ عِيدٍ فَأَرْسَلَ إِلَى أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ بِأَىِّ شَىْءٍ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ فِي مِثْلِ هَذَا الْيَوْمِ؟ قَالَ بِـ {ق} وَاقْتَرَبَتْ .
உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: உமர் (ரழி) அவர்கள் ஒரு பெருநாள் அன்று (பெருநாள் தொழுகைக்காக) புறப்பட்டு, (அன்று) நபி (ஸல்) அவர்கள் என்ன (சூராக்களை) ஓதுவார்கள் என்று அபூ வாக்கித் அல்-லைசி (ரழி) அவர்களிடம் (ஒருவரை) அனுப்பி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘காஃப்’ (50) மற்றும் ‘இக்தரபத்’ (அல்-கமர் 54) (ஆகிய சூராக்களை ஓதுவார்கள்).