حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،. وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي أَخِي عَبْدُ الْحَمِيدِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً فَقَالَ لَهُمْ " أَلاَ تُصَلُّونَ ". قَالَ عَلِيٌّ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ قُلْتُ ذَلِكَ، وَلَمْ يَرْجِعْ إِلَىَّ شَيْئًا، ثُمَّ سَمِعْتُهُ وَهْوَ مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ وَيَقُولُ " {وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَىْءٍ جَدَلاً}"
அலி பின் அபீ தாலிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலி (ரழி) அவர்களையும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரழி) அவர்களையும் சந்திக்க வந்தார்கள். அவர்களிடம், "நீங்கள் (இரவுத்) தொழுகையை நிறைவேற்ற மாட்டீர்களா?.." என்று கேட்டார்கள். அலி (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: நான், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! எங்கள் ஆன்மாக்கள் அல்லாஹ்வின் கையில் உள்ளன; அவன் எங்களை எழுப்ப நாடும்போது, அவன் எழுப்புகிறான்" என்று கூறினேன். நான் அவ்வாறு கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த பதிலும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு அவர்கள் புறப்பட்டுச் செல்லும்போது, தங்கள் தொடைகளில் தட்டிக்கொண்டே, 'மனிதனோ, எல்லாவற்றையும் விட அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.' (18:54) என்று கூறுவதை நான் கேட்டேன்.