அபூ ஸலமா அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"என் ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கடமையான தொழுகைகளைத் தவிர, தமது பெரும்பாலான தொழுகைகளை அமர்ந்த நிலையில் தொழும் வரை மரணிக்கவில்லை. மேலும், குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யப்படும் செயல்களே அவர்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன."