ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலி அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இரவுத் தொழுகையைத் தவறவிட்டபோது, அவர்கள் பகல் நேரத்தில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
"நபியவர்களை (ஸல்) தூக்கம் மிகைத்ததாலோ அல்லது அவர்களின் கண்கள் சோர்வுற்றதாலோ இரவில் தொழ முடியாமல் போனால், அவர்கள் பகல் நேரத்தில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்."