அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மரணத்தருவாயில் இருந்த தங்களின் மகளார் ஒருவரைப் பிடித்து, அவரைக் கட்டியணைத்தார்கள். அவர், தூதரின் கைகளிலேயே மரணமடைந்தார். உம்மு அய்மன் (ரழி) அழுதார்கள். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரின் முன்னிலையிலா நீங்கள் அழுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'தாங்கள் அழுவதை நான் பார்க்கவில்லையா?' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நான் அழவில்லை. இது உண்மையில் ஒரு கருணையாகும். ஒரு விசுவாசிக்கு ஒவ்வொரு சூழலிலும் எல்லா நன்மைகளும் உண்டு. அவர் அல்லாஹ்வைப் (சர்வ வல்லமையும் மாண்பும் மிக்கவன்) புகழ்ந்து கொண்டிருக்கும் போதே, அவரின் ஆன்மா அவரிடமிருந்து பிரிக்கப்படுகிறது!' என்று கூறினார்கள்.