அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அவர்களை அவர்களின் இரத்தத்துடனேயே கபனிடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் எந்தக் காயமும் (அதன் உரிமையாளருடன்) மறுமை நாளில் இரத்தம் வடியும் நிலையிலேயே வரும். அதன் நிறம் இரத்தத்தின் நிறமாகவும், அதன் வாசனை கஸ்தூரியின் வாசனையாகவும் இருக்கும்.'