இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

965 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَقَالَ، يَحْيَى أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ، سَمُرَةَ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِفَرَسٍ مُعْرَوْرًى فَرَكِبَهُ حِينَ انْصَرَفَ مِنْ جَنَازَةِ ابْنِ الدَّحْدَاحِ وَنَحْنُ نَمْشِي حَوْلَهُ ‏.‏
ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு தஹ்தாஹ் (ரழி) அவர்களின் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்களிடம் சேணம் இடப்படாத ஒரு குதிரை கொண்டுவரப்பட்டு, அதில் அவர்கள் சவாரி செய்ய, நாங்கள் அவர்களைச் சுற்றிலும் கால்நடையாக நடந்தோம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح