அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அமர்வதை விட, தம் ஆடையை எரித்துத் தம் தோலையும் சென்றடையும்படியான நெருப்புத் தணல் மீது அமர்வது அவருக்கு மேலானது.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அமர்வதை விட, நெருப்புத் தணலின் மீது அமர்ந்து, அது அவரின் ஆடையை எரித்து, அவரின் தோலையும் சென்றடைவது சிறந்ததாகும்.
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ تُحْرِقُهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அமர்வதை விட, அவரை எரித்துவிடும் நெருப்புத் தணலின் மீது அமர்வது அவருக்குச் சிறந்ததாகும்.”
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لأن يجلس أحدكم على جمرة، فتحرق ثيابه، فتخلص على جلده خير له من أن يجلس على قبر ((رواه مسلم))
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களில் ஒருவர் ஒரு கல்லறையின் மீது அமர்வதை விட, நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து, அது அவரது ஆடையை எரித்து, அவரது தோலைச் சென்றடைவது அவருக்கு மிகவும் மேலானதாகும்.”