அல்-பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “யுஸப்பிதுல்லாஹுல்லதீன ஆமனூ பில்கவ்லிஸ் ஸாபிதி ஃபில் ஹயாதித் துன்யா வஃபில் ஆகிரா” (அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை இவ்வுலகிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு உறுதியாக நிலைநிறுத்துகிறான்) எனும் இறைவசனம், கப்ரின் வேதனை குறித்து அருளப்பட்டது.