وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا مَعْرُوفُ بْنُ خَرَّبُوذَ، قَالَ سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَطُوفُ بِالْبَيْتِ وَيَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ مَعَهُ وَيُقَبِّلُ الْمِحْجَنَ .
அபூதுஃபைல் (ரழி) அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவை (பைத்துல்லாஹ்வை) வலம் வருவதையும், தம்மிடமிருந்த ஒரு கைத்தடியால் அதன் மூலையை (ஹஜருல் அஸ்வத் உள்ள மூலையை) தொடுவதையும், பிறகு அந்தக் கைத்தடியை முத்தமிடுவதையும் கண்டேன்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا مَعْرُوفُ بْنُ خَرَّبُوذَ الْمَكِّيُّ، قَالَ سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ، عَامِرَ بْنَ وَاثِلَةَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَطُوفُ بِالْبَيْتِ عَلَى رَاحِلَتِهِ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنِهِ وَيُقَبِّلُ الْمِحْجَنَ .
அபூ துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரழி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் கஅபாவைத் ‘தவாஃப்’ செய்வதையும், தமது வளைந்த கோலால் (கஅபாவின்) மூலையைத் தொட்டு, அக்கோலை முத்தமிடுவதையும் நான் கண்டேன்.”
அபுத் துஃபைல் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபா) இல்லத்தை வலம் வந்து, தம்மிடம் இருந்த ஒரு வளைந்த தடியால் (ஹஜருல் அஸ்வத் எனும் கறுப்புக் கல் உள்ள) மூலையைத் தொட்டு, அந்த வளைந்த தடியை முத்தமிட்டதை தாம் கண்டதாகக் கூறினார்கள்.