இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1695சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: تَسَحَّرْتُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هُوَ النَّهَارُ إِلاَّ أَنَّ الشَّمْسَ لَمْ تَطْلُعْ ‏.[ قالَ ابُو إسحاق: حديث حُذَيْفَةَ مَنْسوخٌ لَيْسَ بشَيْء.]‏
ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“சூரியன் இன்னும் உதிக்காத விடியற்காலை நேரத்தில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தேன்.”

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறினார்கள்: “ஹுதைஃபா (ரழி) அவர்களின் ஹதீஸ் மாற்றப்பட்டுவிட்டது; அதற்கு எந்தப் பொருளும் இல்லை.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)