حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، وَسُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، أَنَّهُمَا سَمِعَا النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا .
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: "யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை நரக நெருப்பிலிருந்து எழுபது ஆண்டுகள் (பயணத் தொலைவிற்குத்) தூரமாக்குவான்."
இஸ்ஹாக் இப்னு மன்சூர் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு பிஷ்ர் அல்-அப்தி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: யஹ்யா இப்னு சயீத் மற்றும் சுஹைல் இப்னு அபீ ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் இருவரும் நுஃமான் இப்னு அபீ அய்யாஷ் அஸ்-ஸுரகி (ரஹ்) அவர்கள் அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்ததாகக் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: 'அல்லாஹ்வின் பாதையில் எவர் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அவரது முகத்தை எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு நரகத்திலிருந்து அல்லாஹ் அகற்றுவான்.'
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் பாதையில் எவர் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ், அவருடைய முகத்தை நரக நெருப்பிலிருந்து எழுபது ஆண்டுகள் (பயணத் தொலைவு அளவுக்கு) தூரமாக்குவான்.''
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் பாதையில் யார் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அவரை நரக நெருப்பிலிருந்து எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அல்லாஹ் அகற்றுவான்.'"
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'யார் அல்லாஹ் (மிக்க பாக்கியசாலியும், மிக உயர்ந்தவனும்) வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் (பயணிக்கக்கூடிய தூரம்) நரக நெருப்பிலிருந்து தூரமாக்குவான்' என்று கூற நான் கேட்டேன்."
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
"யார் அல்லாஹ்வின் பாதையில் (அவனுடைய திருப்தியை நாடி) ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அந்த நாளின் காரணமாக அல்லாஹ் நரகத்தின் வெப்பத்தை அவருடைய முகத்தை விட்டும் எழுபது ஆண்டுகள் தொலைவிற்குத் தூரமாக்குவான்."
அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அந்த ஒரு நாளுக்குப் பகரமாக அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் (பயணிக்கும் தொலைவிற்கு) நரக நெருப்பிலிருந்து தூரமாக்குவான்.”
யார் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் (அதாவது, ஜிஹாதில் இருக்கும்போது அல்லது அல்லாஹ்வின் திருப்தியை நாடி) ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அவரை அல்லாஹ் நரகத்திலிருந்து நூறு வருடப் பயண தூரம் தூரப்படுத்துவான்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ، بَاعَدَ اللَّهُ، بِذَلِكَ الْيَوْمِ، النَّارَ عَنْ وَجْهِهِ سَبْعِينَ خَرِيفًا .
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அந்த ஒரு நாளுக்காக அல்லாஹ் அவருடைய முகத்தை நரக நெருப்பிலிருந்து எழுபது ஆண்டுகள் (பயண) தூரத்திற்கு விலக்கிவிடுவான்.