அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி), ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) ஆகியோர் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்தோம். (அப்போது எங்களில்) நோன்பு நோற்பவர் நோன்பு நோற்பார்; நோன்பை விட்டுவிடுபவர் நோன்பை விட்டுவிடுவார். (எனினும்) அவர்களில் எவரும் ஒருவரையொருவர் குறை கூறுவதில்லை.
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் இருந்தனர், நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர்கள் நோன்பு நோற்காதவர்களைக் குறை கூறவில்லை, நோன்பு நோற்காதவர்கள் நோன்பு நோற்றவர்களையும் குறை கூறவில்லை.