இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2405சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، أَنْبَأَنَا أَبُو حَمْزَةَ، عَنْ عَاصِمٍ، عَنِ الأَسْوَدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِثَلاَثٍ بِنَوْمٍ عَلَى وِتْرٍ وَالْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ وَصَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வஸிய்யத் செய்தார்கள்: வித்ரு தொழுத பின் உறங்குவது, வெள்ளிக்கிழமை அன்று குஸ்ல் செய்வது, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது." (ஸஹீஹ்).

2450சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ - يَعْنِي مِنْ غُرَّةِ كُلِّ شَهْرٍ - ثَلاَثَةَ أَيَّامٍ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பார்கள்.

ஹதீஸ் தரம் : ஹஸன் (அல்-அல்பானீ)
حسن (الألباني)