أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي عَمَّارٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ يَصُومُ الدَّهْرَ . قَالَ " وَدِدْتُ أَنَّهُ لَمْ يَطْعَمِ الدَّهْرَ " . قَالُوا فَثُلُثَيْهِ قَالَ " أَكْثَرَ " . قَالُوا فَنِصْفَهُ قَالَ " أَكْثَرَ " . ثُمَّ قَالَ " أَلاَ أُخْبِرُكُمْ بِمَا يُذْهِبُ وَحَرَ الصَّدْرِ صَوْمُ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ " .
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்களிடம், ஒருவர் காலமெல்லாம் நோன்பு நோற்கிறார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், "அவர் காலமெல்லாம் உண்ணாமலேயே இருந்திருக்கலாம் (என நான் விரும்புகிறேன்)" என்று கூறினார்கள்.
(தோழர்கள்), "(வருடத்தில்) மூன்றில் இரண்டு பங்குகளா?" என்று கேட்டனர். அதற்கு அவர்கள் "(அது) அதிகம்" என்றார்கள்.
"(வருடத்தில்) பாதியா?" என்று கேட்டனர். அதற்கும் அவர்கள் "(அதுவும்) அதிகம்" என்றார்கள்.
பிறகு, "இதயத்தின் கறையைப்போக்கக் கூடிய ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதாகும்" என்று கூறினார்கள்.