அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நோன்புகளிலேயே மிகவும் சிறந்தது என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பு ஆகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவார்கள். (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும் போது அவர்கள் புறமுதுகிட்டு ஓட மாட்டார்கள்.”