அப்துல்லாஹ் இப்னு ஹப்ஷீ அல்-கத்அமீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: செயல்களில் சிறந்தது எது? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: (தொழுகையில்) நீண்ட நேரம் நிற்பது. மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது: தர்மங்களில் சிறந்தது எது? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: ஒரு மனிதன் தனது உழைப்பால் சம்பாதித்த சிறிய சொத்திலிருந்து கொடுக்கும் தர்மம்.