அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பயணத்) துவக்கத்தில் துல்ஹுலைஃபாவில் இரவு தங்கினார்கள். மேலும் அதன் பள்ளிவாசலில் தொழுதார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை துல்-ஹுலைஃபாவில் அவர்களுடைய வாகனத்தில் சவாரி செய்வதைப் பார்த்தேன். பிறகு, அது அவர்களுடன் எழுந்து நின்றபோது அவர்கள் தல்பியாவைத் தொடங்கினார்கள்."