"நான் இப்னு உமர் (ரழி) அவர்களிடம், 'நீங்கள் ஸிப்திய்யா செருப்புகளை அணிந்திருப்பதையும், 1 அவற்றுடன் வுழூ செய்வதையும் நான் பார்க்கிறேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றை அணிந்திருந்ததையும், அவற்றுடன் வுழூ செய்ததையும் பார்த்தேன்' என்று கூறினார்கள்."
உபைது பின் ஜுரைஜ் கூறினார்:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "(கஅபாவின்) மூலைகளில் இந்த இரண்டு 'யமானீ' மூலைகளைத் தவிர (வேறெதையும்) தாங்கள் தொடுவதை நான் பார்க்கவில்லையே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இரண்டு மூலைகளைத் தவிர (வேறெதையும்) தொடுவதை நான் கண்டதில்லை" என்று கூறினார்கள். (இது சுருக்கப்பட்ட வடிவமாகும்).