ஒருவர் தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். அது அவரைக் கொன்றுவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவரைத் தண்ணீராலும் இலந்தை இலைகளாலும் குளிப்பாட்டுங்கள். அவரது தலையும் முகமும் வெளியே இருக்கும் நிலையில் அவரை இரண்டு ஆடைகளில் கஃபனிடுங்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்.”