"நான் இப்னு உமர் (ரழி) அவர்களிடம், 'நீங்கள் ஸிப்திய்யா செருப்புகளை அணிந்திருப்பதையும், 1 அவற்றுடன் வுழூ செய்வதையும் நான் பார்க்கிறேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றை அணிந்திருந்ததையும், அவற்றுடன் வுழூ செய்ததையும் பார்த்தேன்' என்று கூறினார்கள்."
நான் இப்னு உமர் (ரழி) அவர்களிடம், 'தங்களுடைய ஒட்டகம் தங்களைத் தூக்கிக்கொண்டு நின்றபோது தாங்கள் தல்பியாவைத் தொடங்கக் கண்டேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுடைய ஒட்டகம் அவர்களைத் தூக்கிக்கொண்டு நின்றபோது தல்பியாவைத் தொடங்குவார்கள்."