இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவின்) இவ்விரு மூலைகளையும் - யமானி மூலையையும் ஹஜருல் அஸ்வத் கல்லையும் - தொடுவதை (இஸ்திலாம் செய்வதை) நான் பார்த்ததிலிருந்து, நெருக்கடியான நிலையிலும் சரி, இலகுவான நிலையிலும் சரி, அவ்விரண்டையும் தொடுவதை நான் கைவிட்டதில்லை.