حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَيَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ. تَابَعَهُ الدَّرَاوَرْدِيُّ عَنِ ابْنِ أَخِي الزُّهْرِيِّ عَنْ عَمِّهِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
தங்களின் இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்தவர்களாக கஃபாவை தவாஃப் செய்தார்கள் மேலும் வளைந்த தலைப்பகுதியுடைய ஒரு தடியால் மூலைக்கு (ஹஜருல் அஸ்வத்) நேராக சுட்டிக்காட்டினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தமது ஒட்டகத்தின் மீது (அமர்ந்திருந்தவாறு) கஃபாவை வலம் வந்து, (ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பெற்ற) மூலையை ஒரு கைத்தடியால் தொட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். வளைந்த நுனியுடைய கைத்தடியால் ருக்ன் 1 ஐத் தொட்டார்கள்.