அறியாமைக் காலத்தில் பெண்கள் கஃபாவை நிர்வாணமாகச் சுற்றி வந்தனர், மேலும் கூறினர்: "கஃபாவைச் சுற்றி வருபவர் தம் மறைவிடங்களை மறைத்துக் கொள்வதற்கு ஆடை கொடுப்பவர் யார்?"
பிறகு அவள் கூறுவாள்: "இன்று முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ வெளிப்படும், மேலும் எது வெளிப்படுகிறதோ அதை நான் ஆகுமானதாக ஆக்கமாட்டேன்."
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இந்த வசனம் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டது: "ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்" (7:31).