حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا قَيْسٌ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றுவதற்கும், ஜகாத்தை முறையாகக் கொடுப்பதற்கும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையை நாடுவதற்கும் உறுதிமொழி அளித்தேன்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، سَمِعْتُ جَرِيرًا ـ رضى الله عنه ـ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
ஜரீர் (ரழி) அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவர் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள் என்றும் சாட்சி கூறுவதற்கும், தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றுவதற்கும், ஜகாத் கொடுப்பதற்கும், அல்லாஹ்வின் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளுக்குச் செவியேற்று கீழ்ப்படிவதற்கும், மேலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நற்போதனை செய்வதற்கும் உறுதிமொழி (பைஅத்) எடுத்துக்கொண்டேன்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றுவதாகவும், ஜகாத் கொடுப்பதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நல்ல உபதேசம் செய்வதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ .
ஜரீர் (ரழி) அவர்கள் கூறினார்கள் என அறிவிக்கப்படுகிறது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவதற்கும், ஜகாத் கொடுப்பதற்கும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உளத்தூய்மை காட்டுவதற்கும், நலம் நாடுவதற்கும் பைஅத் செய்தேன்.
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் தொழுகையை நிலைநிறுத்துவதாகவும், ஜகாத் கொடுப்பதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன்."
وعن جرير بن عبد الله، رضي الله عنه، قال: بايعت النبي، صلى الله عليه وسلم، على إقام الصلاة، وإيتاء الزكاة، والنصح لكل مسلم. ((متفق عليه)) .
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் ஸலாத்தை நிலைநாட்டுவதாகவும், ஸகாத்தை வழங்குவதாகவும், மேலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உடன்படிக்கை செய்தேன்.