யஸீத் பின் ஷைபான் அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் (அரஃபாவில்) நின்றுகொண்டிருந்தபோது, இப்னு மிர்பஃ அல்-அன்சாரி (ரழி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் (இமாமை விட்டும்) தொலைவான ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தோம். அவர்கள் கூறினார்கள்: 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் அனுப்பிய தூதர் ஆவேன். (நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:) உங்கள் வழிபாட்டு நிலைகளிலேயே நீங்கள் நிலைத்திருங்கள். ஏனெனில், நிச்சயமாக நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் பாரம்பரியத்தில் இருக்கிறீர்கள்.'"