இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது, உஸாமா (ரழி) அவர்கள் (நபியவர்களுக்குப்) பின்னால் அமர்ந்திருந்தார்கள். உஸாமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் (நபியவர்கள்) முஸ்தலிஃபாவிற்கு வரும் வரை இதே நிலையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.