حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، مَوْلَى وَالِبَةَ الْكُوفِيُّ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ دَفَعَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَاءَهُ زَجْرًا شَدِيدًا وَضَرْبًا وَصَوْتًا لِلإِبِلِ فَأَشَارَ بِسَوْطِهِ إِلَيْهِمْ وَقَالَ أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَإِنَّ الْبِرَّ لَيْسَ بِالإِيضَاعِ . أَوْضَعُوا أَسْرَعُوا. خِلاَلَكُمْ مِنَ التَّخَلُّلِ بَيْنَكُمْ، وَفَجَّرْنَا خِلاَلَهُمَا. بَيْنَهُمَا.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அரஃபா நாளில் (மஃரிப் தொழுகைக்குப் பின் முஸ்தலிஃபாவை நோக்கி) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குப் பின்னால் (மக்கள் ஒட்டகங்களை) அதட்டி விரட்டுவதையும், அடிப்பதையும், ஒட்டகங்களின் சப்தத்தையும் கேட்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் தம் சாட்டையால் மக்களை நோக்கி சைகை செய்து, "மக்களே! அமைதியைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில், (வாகனங்களை) விரைந்து செலுத்துவது நன்மையன்று" என்று கூறினார்கள்.