இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1298 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ، بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ يَحْيَى بْنِ الْحُصَيْنِ، عَنْ أُمِّ الْحُصَيْنِ، جَدَّتِهِ قَالَتْ حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَجَّةَ الْوَدَاعِ فَرَأَيْتُ أُسَامَةَ وَبِلاَلاً وَأَحَدُهُمَا آخِذٌ بِخِطَامِ نَاقَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالآخَرُ رَافِعٌ ثَوْبَهُ يَسْتُرُهُ مِنَ الْحَرِّ حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ ‏.‏ قَالَ مُسْلِمٌ وَاسْمُ أَبِي عَبْدِ الرَّحِيمِ خَالِدُ بْنُ أَبِي يَزِيدَ وَهُوَ خَالُ مُحَمَّدِ بْنِ سَلَمَةَ رَوَى عَنْهُ وَكِيعٌ وَحَجَّاجٌ الأَعْوَرُ ‏.‏
உம்முல் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் ஹஜ்ஜத்துல் வதா எனும் இறுதி ஹஜ்ஜின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அப்போது உஸாமா (ரழி) அவர்களையும் பிலால் (ரழி) அவர்களையும் கண்டேன். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெண் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்திருந்தார். மற்றொருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கற்கள் எறியும் வரை, அவர்களை வெயிலிலிருந்து காப்பதற்காகத் தமது ஆடையை (அவர்களின் தலைக்கு மேல்) உயர்த்திக் கொண்டிருந்தார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح