நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ர் நாளில் தமது ஒட்டகத்தில் சவாரி செய்தவர்களாக கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். மேலும் அவர்கள், "(என்னைப் பார்த்து) உங்களுடைய ஹஜ் கிரியைகளைக் கற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில், என்னுடைய இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு நான் மீண்டும் ஹஜ் செய்வேனா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.