'அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம், மக்கள் 'அகபா'வின் மேற்புறத்திலிருந்து ஜம்ராவின் மீது சிறு கற்களை எறிந்தார்கள், ஆனால் அவர்களோ அதன் மீது பள்ளத்தாக்கின் நடுவிலிருந்து கற்களை எறிந்தார்கள் என்று கூறப்பட்டது. அதற்கவர்கள் கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக, சூரத்துல் பகரா வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டவர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் அதன் மீது கற்களை எறிந்தார்கள்.