அபூ அய்யூப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (ஜிஹாதுக்காகவோ அல்லது வேறு நற்செயலுக்காகவோ) காலையிலோ மாலையிலோ மேற்கொள்ளப்படும் ஒரு பயணம், சூரியன் உதித்து மறையும் அனைத்தையும் (அதாவது, இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும்) விடச் சிறந்ததாகும்.