நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "ஓர் இரவும் ஒரு பகலும் (இறைவழியில்) காவல் புரிவது, ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்பதையும், ஒவ்வொரு இரவும் நின்று வணங்குவதையும் விட (நன்மையில்) சிறந்ததாகும். ஒருவர் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மரணித்துவிட்டால், அவர் செய்து கொண்டிருந்த (அந்த நல்ல) செயல் (அவர் உயிருடன் இருப்பது போல்) தொடர்ந்து நடக்கும்; அதற்கான அவருடைய நற்கூலி இடையறாது அவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்; மேலும், அவர் கப்ரின் வேதனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்."