அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு மனிதர் மூக்குக்கயிறு இடப்பட்ட ஒரு பெண் ஒட்டகத்தைக் கொண்டு வந்து கூறினார்:
இது அல்லாஹ்வின் பாதையில் (அர்ப்பணிக்கப்படுகிறது).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதற்காக மறுமை நாளில் உங்களுக்கு எழுநூறு பெண் ஒட்டகங்கள் கிடைக்கும், அவை அனைத்தும் மூக்குக்கயிறு இடப்பட்டிருக்கும்.