وعن أبي يزيد معن بن يزيد بن الأخنس رضي الله عنهم، وهو وأبوه وجده صحابيون، قال: كان أبي يزيد أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل في المسجد فجئت فأخذتها فأتيته بها، فقال: والله ما إياك أردت، فخاصمته إلى رسول الله صلى الله عليه وسلم فقال: لك ما نويت يا يزيد، ولك ما أخذت يامعن ((رواه البخاري)).
மஃன் இப்னு யஸீத் இப்னு அக்னஸ் (ரழி) அவர்கள் (அவரும், அவருடைய தந்தையாரும், அவருடைய பாட்டனாரும் நபித்தோழர்கள் ஆவார்கள்) அறிவித்தார்கள்:
என் தந்தையார் (யஸீத்) தர்மம் செய்வதற்காக சில தீனார்களை எடுத்து, அவற்றை பள்ளிவாசலில் இருந்த ஒருவரிடம் வைத்தார். நான் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு அவரிடம் (என் தந்தையிடம்) சென்றேன். அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உனக்குத் தருவதை நான் நாடவில்லை (மாறாக, வேறு ஒருவருக்குக் கொடுக்கவே நான் நாடினேன்)” என்று கூறினார். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். நபி (ஸல்) அவர்கள், “யஸீதே! நீர் நாடியது உமக்கு உண்டு. மஃனே! நீர் எடுத்துக்கொண்டது உமக்குரியதாகும்” என்று கூறினார்கள்.
(இதை புகாரி அறிவித்துள்ளார்.)