இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5142ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يُحَدِّثُ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلاَ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، حَتَّى يَتْرُكَ الْخَاطِبُ قَبْلَهُ، أَوْ يَأْذَنَ لَهُ الْخَاطِبُ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் மற்றவருடைய வியாபாரத்தின் மீது (விலை பேசி முடிவான) வியாபாரம் செய்வதைத் தடுத்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதரர் (ஒரு முஸ்லிம்) பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு முன்னால் பெண் பேசியவர் (அப்பெண்ணை) விட்டுவிடும் வரை அல்லது (முன்னால் பெண் பேசிய) அவர் இவருக்கு அனுமதியளிக்கும் வரை, அவர் பெண் பேசியதன் மீது இவர் பெண் பேசக் கூடாது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح