இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3533ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَلاَ تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي شَتْمَ قُرَيْشٍ وَلَعْنَهُمْ يَشْتِمُونَ مُذَمَّمًا وَيَلْعَنُونَ مُذَمَّمًا وَأَنَا مُحَمَّدٌ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குறைஷிகளின் வசவுகளையும் அவர்களது சாபத்தையும் அல்லாஹ் என்னைவிட்டு எவ்வாறு திருப்பிவிடுகிறான் என்று நீங்கள் ஆச்சரியப்படவில்லையா? அவர்கள் 'முதம்மம்' (அதாவது, இகழப்பட்டவன்) என்று ஏசுகின்றனர்; 'முதம்மம்' (அதாவது, சபிக்கப்பட்டவன்) என்று சபிக்கின்றனர். நானோ முஹம்மது (அதாவது, புகழப்பட்டவன்) ஆவேன்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح