இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1483ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ طُلِّقَتْ خَالَتِي فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ بَلَى فَجُدِّي نَخْلَكِ فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفًا ‏ ‏ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
என் தாயின் சகோதரி விவாகரத்துச் செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் தமது பேரீச்ச மரங்களை அறுவடை செய்ய விரும்பினார்கள். ஆனால் ஒருவர் (அவர் இத்தா காலத்திலிருந்ததால்) அவர்கள் வெளியே செல்வதைக் கண்டித்தார். எனவே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! நீர் உமது பேரீச்ச மரங்களை அறுவடை செய்வீராக! ஏனெனில், நீர் தர்மம் செய்யலாம் அல்லது ஒரு நற்செயலைச் செய்யலாம்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح